உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: 'களத்தூர் கண்ணம்மா'வே காப்பி அடித்த படம்தான்

பிளாஷ்பேக்: 'களத்தூர் கண்ணம்மா'வே காப்பி அடித்த படம்தான்


'நோபடீஸ் சைல்ட்' என்ற ஹாங்காங் படம் 1960ம் ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரெஞ்சு எழுத்தாளர் ஹெகளின் எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு சீன மொழியில் தயாரான இந்த படம் உலகம் முழுவதும் வெளியானது. யுத்த காலத்தில் தன் தாயை தொலைத்த ஒரு சிறுமி யுத்தம் முடிந்த பிறகு தன் தாயை தேடி அலைகிற கதை.

இந்த கதையைத்தான் ஏவிஎம் செட்டியார் 'களத்தூர் கண்ணம்மா' என்ற பெயரில் உருவாக்கினார். சிறுமி என்பதற்கு பதில் சிறுவன் என்று மாற்றியும், யுத்தம் என்பதற்கு பதில் குடும்ப சூழ்நிலை என்று ஆக்கியும் படத்தை எடுத்தார். இதில் அந்த சிறுவனாக கமல்ஹாசன் நடித்தார். ஜெமினி, சாவித்திரி இணைந்து நடித்த இந்த படம் பெரும் வெற்றி பெற்றது.

ஆனால் 'களத்தூர் கண்ணம்மா' உருவாவதற்கு முன்பே இதே கதை சினிமா ஆனது. பெயர் 'கடவுளின் குழந்தை'. 'தமிழ்ப் பண்ணை' சின்ன அண்ணாமலை, தானே திரைக்கதை, வசனம் எழுதித் தயாரித்து, தாதா மிராசியை இயக்க வைத்த அந்தப் படம், 1960 ஜூலை மாதம் வெளியாகி வரவேற்பையும் விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றது.

இதன்பின்னர் ஒரு மாதம் கழித்து ஆகஸ்டில் ஏ.பீம்சிங் இயக்கத்தில் 'களத்தூர் கண்ணம்மா' வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. ஒரே கதையின் தாக்கத்திலிருந்து உருவானவை என்றபோதும், இரண்டு படங்களும் முற்றிலும் வேறாக இருந்தன. 'கடவுளின் குழந்தை' படத்தில் பேபி பரிமளா நடித்த சிறுமி கேரக்டரில் சிறுவனாக கமல் நடித்தார். கல்யாண் குமார் ஜமுனா நடித்த கேரக்டரில் ஜெமினி கணேசன், சாவித்ரி நடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !