எளிமையாக நடந்த குஷ்பு மகள் பட பூஜை
தாமோ நாகபூஷ்ணம் இயக்கத்தில் குஷ்பு மூத்த மகள் ஹீரோயினாக அறிமுகம் ஆகும் 'அட்டாக்கர்' பட பூஜை சென்னையில் இன்று காலை நடந்தது. இதில் தனுஷ் மருமகனும், நீக் படத்தில் நடித்தவருமான பவிஷ் ஹீரோவாக நடிக்கிறார். வாலிபால் விளையாட்டு பின்னணியில் இந்த படம் உருவாகிறது. இதற்காக படக்குழுவினர் சில மாதங்களாக வாலிபால் பயிற்சி எழுத்து வருகின்றனர்.
குஷ்பு மகள் தமிழில் அறிமுகம் ஆகும் பட பூஜை எளிமையாக நடந்தது. இதில் குஷ்பு, சுந்தர் சி என யாரும் கலந்து கொள்ளவில்லை. அடுத்த வாரம் அவந்திகா திருமணம் என்பதால் அவர்கள் அதில் பிஸி என தகவல். அடுத்த வாரம் கோவாவில் திருமணம். அடுத்து ஸ்பெயின் நாட்டில் சில நிகழ்ச்சிகள் நடக்க உள்ளதாக தகவல். இந்நிலையில் மணப்பெண் அவந்திகா இந்த பூஜையில் கலந்து கொண்டார். இந்த படம் தவிர இன்னும் சில படங்களில் அவந்திகா நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். அவர் திருமணத்துக்குபின் அந்த அறிவிப்பு வர உள்ளது.