உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : கருணாநிதியால் மாறிய ஜோடி

பிளாஷ்பேக் : கருணாநிதியால் மாறிய ஜோடி

சிவாஜி, சாவித்ரி இணைந்து நடித்த தோல்வி படங்களில் ஒன்று 'குறவஞ்சி'. கருணாநிதி கதை வசனம் எழுதிய வரலாற்று படங்களில் முக்கியமான படமாக இருந்தும் போதிய வரவேற்பை பெறாத படம். கருணாநிதி, ஆர்.எம். வீரப்பன், ஏ.காசிலிங்கம் இணைந்து தயாரித்த படம், ஏ.காசிலிங்கம் படத்தை இயக்கினார். டி.ஆர்.பாப்பா இசை அமைத்தார்.

இந்த படத்தில் முதலில் நடிப்பதாக இருந்தவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஆனால் கருணாநிதிக்கும், அவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நடிக்க மறுத்து விட்டார். இதனால் கோபம் அடைந்த கருணாநிதி சிவாஜியை நடிக்க கேட்டுக் கொண்டார். அவரும் முதலில் மறுத்தார். ஆனால் கருணாநிதி வற்புறுத்தி நடிக்க வைத்தார்.

இதேபோல நாயகியாக முதலில் ஒப்பந்தமான ராஜசுலோச்சனாவும் என்ன காரணத்தாலோ நடிக்க மறுத்து விட்டார். ராஜசுலோச்சனாவுக்கு பதிலாக சிவாஜியே சாவித்ரியிடம் பேசி நடிக்க வைத்தார். இப்படி படம் தொடங்கும்போதே பிரச்சினைகளுடன்தான் தொடங்கியது.

இன்பபுரி நாட்டின் ஒரு பகுதியை முகாரி என்பவர் ஆள்கிறார். இமயா என்ற அமைச்சரின் கைப்பாவையாகி அவரது சதியில் சிக்குகிறார், முகாரி. அதைக் கண்டு அரசுக்கு எதிராக புரட்சி செய்கிறார் கதிரவன் என்ற இளைஞர், இன்பபுரி இளவரசி குமரி, கதிரவன் மேல் காதல் கொள்கிறாள். ஆனால் கதிரவன் மீனவர் குலப் பெண்ணான பொன்னியை காதலிக்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.

இதில், கதிரவனாக சிவாஜி, இளவரசி குமரியாக சாவித்திரி, பொன்னியாக மைனாவதி நடித்தனர். இவர்கள் தவிர, பண்டரி பாய், ஓ.ஏ.கே. தேவர், 'குலதெய்வம்' ராஜகோபால், ஆர். பாலசுப்பிரமணியம், சி.கே. சரஸ்வதி, ராதாபாய், எஸ்.ஆர். கோபால், டி.கே. சம்பங்கி, எம்.என். கிருஷ்ணன், எம்.ஆர். சந்தானம், செந்தாமரை, என்.எஸ்.நடராஜன், கிருஷ்ணமூர்த்தி என பலர் நடித்தனர். இது சிவாஜியின் சிவாஜியின் 60-வது படம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !