1 மில்லியன் பார்வைகளை கடந்த பட்டாம்பூச்சி பாடல்
ADDED : 3 hours ago
கருப்பு படத்தை அடுத்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். அவருக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ள இந்த படத்தில் ராதிகா சரத்குமார், ரவீனா டண்டன், பவானி ஸ்ரீ, சுனில் ஷெட்டி, காளி வெங்கட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் போஸ்டர்கள், டீசர் ஏற்கனவே வெளியான நிலையில் நேற்று படத்தின் பட்டாம்பூச்சி என்ற முதல் பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.
அருண் ராஜா காமராஜ் எழுதியுள்ள இந்த பட்டாம்பூச்சி பாடலை, சுபலட்சுமி பாடியுள்ளார். கதைப்படி நாயகி மமிதா பைஜூ பாடும் பாடலாக இப்பாடல் இடம் பெற்றுள்ளது. பாடல் வெளியான 24 மணிநேரத்தில் 1 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்தை சித்தாரா எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.