ஜூன் 25ல் ஓடிடியில் வெளியாகும் பிளாஸ்ட்
சுபாஷ் கே.ராஜ் இயக்கத்தில் அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் திரைக்கு வந்த படம் பிளாஸ்ட். ஆக்க்ஷன் கதையில் உருவான இந்த படம் மே 28ல் திரைக்கு வந்தது. 18 கோடியில் தயாரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் 70 கோடிக்கு அதிகமான வசூலை குவித்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்திருக்கிறது. சமீபத்திய கோலிவுட்டியில் அதிக லாபம் ஈட்டிய படங்களில் ஒன்றாக இந்த பிளாஸ்ட் இடம் பெற்றுள்ளது. அதோடு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா பாக்ஸ் ஆபிஸிலும் அமோகமான வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் பிளாஸ்ட் படத்தின் டிஜிட்டல் உரிமையை பெற்றுள்ள நெட் பிளிக்ஸ் நிறுவனம் வருகிற ஜூன் 25ம் தேதி இப்படத்தை ஓடிடியில் வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறது. அதோடு இந்த படம் தெலுங்கு உள்ளிட்ட மேலும் சில முக்கிய மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. ரவி பஸ்ரூர் என்பவர் இசையமைத்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.