இரண்டே நாட்களில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'மா இன்ட்டி பங்காரம்'
நந்தினி ரெட்டி இயக்கத்தில், சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'மா இன்ட்டி பங்காரம்' படம் கடந்த வாரம் வெளியானது. தமிழிலும் ‛எங்கள் தங்கம்' என்ற பெயரில் டப்பங்கி ஆகி வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் முதல் வார இறுதியில் இப்படம் 1.25 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்து லாபத்தை ஆரம்பித்துவிட்டது. கதாநாயகி ஒருவர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த படம் மூன்று நாட்களிலேயே இப்படி ஒரு வசூலைக் குவித்துள்ளது.
இப்படம் இரண்டு நாட்களில் உலக அளவில் 28 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது. முதல் இரண்டு நாட்களை விட மூன்றாவது நாளான நேற்று வசூல் அதிகமாக இருந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. நேற்றைய மூன்றாவது நாள் வசூலுடன் சேர்த்தால் 45 கோடி வசூலைப் பெற்றிருக்க வாய்ப்புள்ளது.
இப்படத்திற்கு உலகம் முழுவதும் சுமார் 11 கோடிக்கு வியாபாரம் நடந்தது. அந்த வசூலை இரண்டே நாட்களில் பெற்று லாபக் கணக்கை ஆரம்பித்துவிட்டதாம். நேற்று முதல் வசூலாகும் ஒவ்வொரு தொகையும் லாபக் கணக்கில் மட்டுமே சேரும். படத்திற்கான வரவேற்பு குறித்து படக்குழு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாம்.