அருண் விஜய் ஜோடியாக மிர்ணா மேனன்
ADDED : 8 hours ago
இயக்குனர் முத்தையா குட்டிப் புலி, கொம்பன், மருது, விருமன் போன்ற கிராமத்து ஆக் ஷன் படங்களை இயக்கி வெற்றிகளைப் பெற்றவர். அதேபோல் முத்தையா இயக்கத்தில் வெளியான சமீபத்திய சில படங்கள் வெற்றியை பெறவில்லை. தற்போது நடிகர் அருண் விஜயை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகியாக யார் நடிப்பார் என்பதில் சஸ்பென்ஸ் நீடித்து வந்தது. இப்போது இதற்கு பதில் கிடைத்துள்ளது. கதாநாயகியாக ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மருமகள் ஆக நடித்து பிரபலமான மிர்ணா மேனன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மிர்ணா ஏற்கனவே தமிழில் புர்கா, களவாணி மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.