பஹத் பாஸில் பட இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் அன்னா பென்
ADDED : 8 hours ago
மலையாளத்தில் வெளியான கும்பளங்கி நைட்ஸ், ஹெலன் ஆகிய படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை அன்னா பென். இவர் தமிழில் கொட்டுக்காளி, சமீபத்தில் வெளியான கான்சிட்டி ஆகிய படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த நிலையில், தற்போது மலையாளத்தில் மிஸ்ட்ரி திரில்லர் கதை அம்சத்துடன் உருவாகும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் அன்னா பென்.
கதாநாயகனாக பிரேமலு புகழ் காமெடி நடிகர் சங்கீத் பிரதாப் நடிக்கிறார். பஹத் பாசில் நடித்த அதிரன் மற்றும் அமலா பால் நடித்த டீச்சர் ஆகிய படங்களை இயக்கிய விவேக் இயக்குகிறார். கொச்சியில் சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. ஜூலை மாதத்தின் இரண்டாம் பாதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.