உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷ் பகிர்ந்த போஸ்டர்: எந்த படத்தின் அப்டேட்?

தனுஷ் பகிர்ந்த போஸ்டர்: எந்த படத்தின் அப்டேட்?


'கர' படத்தை அடுத்து நடிகர் தனுஷ் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு 'ஓம்' என தலைப்பு வைத்துள்ளனர். விறுவிறுப்பாக இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

'ஓம்' படத்தை முடித்ததும் தனுஷ் நடிக்க உள்ள படங்களின் பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது. அடுத்து, 'லப்பர் பந்து' இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கும் படம், வெற்றிமாறன் இயக்கத்தில் 'வட சென்னை' ஆகியவை ஏற்கனவே அறிவித்து, படப்பிடிப்புக்காக காத்திருக்கின்றன.

இந்த நிலையில், நடிகர் தனுஷ், தனது சமூக வலைதளப் பக்கங்களில், நேற்று (ஜூலை 7) திடீரென போஸ்டர் ஒன்றை பகிர்ந்து, 10.7.26 எனக் குறிப்பிட்டுள்ளார். 'DxV' ஆகிய எழுத்துகள் பாதி மறைந்திருப்பதுபோல் தெரியும் அந்த போஸ்டர் பல யூகங்களை கிளப்பியுள்ளது.

அதாவது, அந்த எழுத்துகள் D, V என உள்ளதாகவும், தனுஷ்-வெங்கட்பிரபு இணைய உள்ள படத்தின் அப்டேட் ஆக இருக்கும் என்கின்றனர். சில மாதங்களுக்கு முன் தனுஷ் உடன் வெங்கட்பிரபு இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இருக்க வாய்ப்புள்ளதாம். அதேநேரம், 'ஓம்' படத்தின் அப்டேட், மாரி செல்வராஜ் பட அப்டேட், 'டிவிவி' என்ற தெலுங்கு நிறுவனத்தின் படம் பற்றிய அப்டேட், தனுஷ் - தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி பட அப்டேட் என பலரும் பல யூகங்களை சொல்லி வருகின்றனர். ஜூலை 10ல், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் எது உண்மை எனத் தெரியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !