ரூ.25 கோடி வசூலை தொட்ட கட்டா குஸ்தி 2
ADDED : 13 hours ago
செல்லா ஐயா இயக்கத்தில் விஷ்ணு விஷால் ஐஸ்வர்ய லட்சுமி நடித்த கட்டா குஸ்தி 2 படம் 5 நாட்களில் 25 கோடி வசூலை தொட்டுள்ளது. ஏற்கனவே படம் ரிலீஸ் ஆகும் முன்பே லாபத்தை சம்பாதித்து இருந்தது. இப்பொழுது 25 கோடி தியேட்டர் வசூல் என்பதால் கட்டா குஸ்தி முதல் பாகம் போல் இதுவும் வெற்றி பெற்றுள்ளது. விரைவில் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது. கட்டா குஸ்தி, கட்டா குஸ்தி 2 படங்களின் வெற்றியால் ஹீரோயின் ஐஸ்வர்ய லட்சுமிக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. அவரை மனதில் வைத்து பலர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை எழுதுகிறார்களாம். பல பட நிறுவனங்கள் அவரிடம் பேசி வருகின்றன. விரைவில் அடுத்தடுத்து அவரின் புதிய பட அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.