கிஷன் தாஸ், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி இணைந்து நடிக்கும் 'சீ யூ'!
ADDED : 1 days ago
யூடியூப் மூலம் பிரபலமாகி 'முதல் நீ முடிவும் நீ, தருணம், ஆரோமலே' என குறுகிய பட்ஜெட் படங்களில் ஹீரோவாக நடித்தவர் கிஷன் தாஸ்.
தற்போது கிஷன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சந்தோஷ் ஸ்ரீவட்சன் இயக்கத்தில் கிஷன் தாஸ், 'லப்பர் பந்து' நாயகி சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி இருவரும் இணைந்து நடிக்கும் இந்த படத்திற்கு 'சீ யூ' என தலைப்பு வைத்துள்ளதாக முதல் பார்வை போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.
'லெவன்' படத்தை தயாரித்த ஏ.ஆர். எண்டர்டெயின்மென்ட் மற்றும் டி ஸ்டுடியோஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். இந்த முதல் பார்வை நடிகர் ஆர்யா தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியீட்டு வாழ்த்தியுள்ளார்.