2026ல் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் 3 தமிழ்ப் படங்கள்
இந்திய சினிமாவில் அடுத்து வர உள்ள இந்த ஆண்டின் எஞ்சியுள்ள மாதங்களில் சில முக்கியமான பான் இந்தியா படங்கள் வெளியாக உள்ளன. அந்தப் படங்கள் மீதான எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது என்பது இப்போதுதான் ஆரம்பமாகி உள்ளது.
கடந்த சில நாட்களாக, உலக அளவில் வெளியாகும் படங்களின் தகவலை கொண்ட ஐஎம்டிபி இணையதளம் வெளியிட்டுள்ள ஒரு டாப் 10 படங்களின் பட்டியல் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்தப் படங்கள் இனி வர உள்ள பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்கள் என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ளது.
அவற்றில் கன்னடப் படமான 'டாக்சிக்' படம் 47 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. தமிழ்ப் படமான 'ஜனநாயகன்' படம் 12.7 சதவீதத்துடன் 2ம் இடத்திலும், 'டிசி' படம் 7.4 சதவீதத்துடன் 5ம் இடத்திலும், 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் 2.9 சதவீதத்துடன் 8ம் இடத்திலும் உள்ளன.
3வது இடத்தில் ஹிந்திப் படமான 'ஆவாரப்பன் 2', 4வது இடத்தில் ஹிந்திப் படமான 'இந்திரஜால்', 6வது இடத்தில் ஹிந்தி வெப்சீரிஸ் 'ஆதர்ஷ் பால் வித்யாலயா', 7வது இடத்தில் ஹிந்திப் படமான 'ஈதா', 9வது இடத்தில் தெலுங்குப் படமான 'தி பாரடைஸ்', 10வது இடத்தில் ஹிந்திப் படமான 'மிர்சாபூர்' ஆகியவையும் உள்ளன.
இந்தப் பட்டியலில் 'ஜெயிலர் 2' படம் இடம் பெறாமல் இருப்பது ரஜினி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும், முதலிடத்தில் உள்ள 'டாக்சிக்' படத்திற்கும், இரண்டாம் இடத்தில் உள்ள 'ஜனநாயகன்' படத்திற்கும் இடையில் சுமார் 35 சதவீத வித்தியாசம் உள்ளது. இதை எப்படி ஏற்றுக் கொள்வது என ரஜினி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.