உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மகாபாரதத்தை வாசியுங்கள்: கர்ணன் சர்ச்சைக்கு 'கல்கி' இயக்குனர் பதில்

மகாபாரதத்தை வாசியுங்கள்: கர்ணன் சர்ச்சைக்கு 'கல்கி' இயக்குனர் பதில்


சமீபத்தில் தெலுங்கில் நாகார்ஜுனாவின் மகன் அகில் நடிப்பில் உருவான 'லெனின்' திரைப்படம் வெளியாகி வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தப் படம் கிராமத்து பின்னணியில் மகாபாரதத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இதில் நடித்த நடிகர் பிரமோத் பஞ்சுவின் கர்ணன் கதாபாத்திரம் சிறப்பாக இருந்ததாகவும், ஆனால் நாக் அஸ்வின் இயக்கிய 'கல்கி' படத்தில் கர்ணனை மிகைப்படுத்தி காட்டியது மகாபாரதத்திற்கு செய்யும் அவமரியாதை என்றும் ரசிகர் ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார்.

அவரது இந்த விமர்சனத்திற்கு பதிலளித்த இயக்குனர் நாக் அஸ்வின், விவேக் தேவராய் என்பவர் எழுதிய மகாபாரத மொழிபெயர்ப்பின் ஒரு பக்கத்தைப் பகிர்ந்து, அதில் துரோண பருவத்தில் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கர்ணனைப் பற்றி பேசிய பகுதியை குறிப்பிட்டுள்ளார். தயவு செய்து மகாபாரதத்தை வாசியுங்கள். கிருஷ்ணர் கர்ணனை எத்தனை முறை அர்ஜுனனிடம் புகழ்ந்துள்ளார் என்பதை கூகுளில் தேடிப் பாருங்கள். நமது வரலாற்றின் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. நான் என்ன செய்கிறேன் என்பது எனக்குத் தெரியும் என்று பதிலடி கொடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !