உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தும்பாட் 2 படத்தில் இணைந்தார் ஆலியா பட்

தும்பாட் 2 படத்தில் இணைந்தார் ஆலியா பட்

2018ல் வெளியான திகில் கலந்த பேண்டஸி படமான தும்பாட். இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. முதல் பாகத்தின் நாயகன் சோஹும் ஷா மீண்டும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, நவாசுதீன் சித்திக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இணைவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பாலிவுட்டின் முன்னணி நடிகையும் ஆல்பா பட நட்சத்திரமுமான ஆலியா பட், அதிகாரப்பூர்வமாக தும்பாட்- 2 படத்தில் இணைந்துள்ளார். ஆதேஷ் பிரசாத் இயக்கத்தில் உருவாகும் தும்பாட் 2 படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே மும்பையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற டிசம்பர் 3ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சன்யுக்தா காசா படத்தொகுப்பாளராகப் பணியாற்ற, இசையமைப்பாளர் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.

சமீபகாலமாக பாலிவுட் திரையுலகில் தென் இந்தியக் கதைக் களங்களுக்கும், புராண பின்னணி கொண்ட திகில் திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தும்பாட் படத்தின் மறுவெளியீடு பாக்ஸ் ஆபீஸில் அசல் வெளியீட்டை விட அதிக வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது ஆலியா பட் போன்ற இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் இதில் இணைந்திருப்பது, படத்தின் வணிக ரீதியான எல்லையை பான்-இந்தியா அளவில் மேலும் உயர்த்தியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !