உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சென்னையில் செட்டிலான ஸ்ருதிஹாசன் : காரணம் என்ன ?

சென்னையில் செட்டிலான ஸ்ருதிஹாசன் : காரணம் என்ன ?

தமிழ் சினிமாவில் மூத்த கதாநாயகன் கமல்ஹாசன். நடிப்பதோடு மட்டுமல்லாமல் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்மன்', சிவகார்த்திகேயன் நடிக்கும் 'சேயோன்' ஆகிய படங்கள் தயாரிப்பில் உள்ளன. அடுத்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடிக்க நெல்சன் இயக்கப் போகும் படம் தயாராக உள்ளது.

இந்நிலையில் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் புதிய வீடு ஒன்றை வாங்கி கிரகப்பிரவேசம் செய்துள்ளார். அந்த வீட்டிற்காக அவர் பூஜை செய்த புகைப்படங்களும் வெளியாகி உள்ளது. அப்பா கமல்ஹாசனைப் போல அல்லாமல் அதிக கடவுள் பக்தி கொண்டவர் ஸ்ருதிஹாசன்.

இத்தனை வருட காலமாக மும்பையில் வாழ்ந்து வந்த ஸ்ருதிஹாசன் இனிமேல் சென்னையில்தான் வசிக்கப் போகிறாராம். அதற்கான காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது. படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் அவரது அப்பா கமல்ஹாசனின் படத் தயாரிப்புகளையும் கவனித்துக் கொள்ளப் போகிறாராம். அனைத்துமே பெரிய பட்ஜெட் கொண்ட படங்கள் என்பதால் மகள் கவனித்துக் கொள்வதும் சரியாக இருக்கும் என கமல்ஹாசன் முடிவெடுத்துள்ளாராம்.

ஸ்ருதிஹாசன் நடித்து அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள 'டிரைன்' படம் வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !