உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛ஒடிசி' பார்க்க ரெடியா... அரைமணிநேரம் முன்னதாக செல்லுங்கள்... முழுமையான ஐமேக்ஸ் அனுபவத்தை உணருங்கள்

‛ஒடிசி' பார்க்க ரெடியா... அரைமணிநேரம் முன்னதாக செல்லுங்கள்... முழுமையான ஐமேக்ஸ் அனுபவத்தை உணருங்கள்

ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். ‛பேட்மேன் படங்கள், இன்செப்சன், இன்டர்ஸ்டெல்லர், டன் கிரீக், டெனட்' ஆகிய படங்கள் அதற்கு உதாரணம். மார்வெல், டிசிக்கு எப்படி தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளதோ அதேப்போன்று இவரது படங்களுக்கும் தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இவரது கடைசி படமாக வெளியான ‛ஓபன் ஹெய்மர்' பல ஆஸ்கர் விருதுகளை வென்றது.

இவரது அடுத்த படைப்பாக ‛தி ஒடிசி' படம் உருவாகி உள்ளது. டாம் ஹாலண்ட், மேட் டாமன், அன்னே ஹாத்வே, ஜெண்டயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பண்டைய கிரேக்கக் கவிஞர் ஹோமர் எழுதிய புகழ்பெற்ற காவியம் ‛ஒடிசி'. ஒடிசியஸ் என்ற வீரனின் 10 ஆண்டுகால சாகசப் பயணத்தைப் பற்றிய கதை. இந்த காவியத்தை அடிப்படையாகக் கொண்டு கிறிஸ்டோபர் நோலன் இந்த படத்தை இயக்கி உள்ளார்.

இந்த படம் முழுக்க முழுக்க ஐமேக்ஸில் பார்க்கும் வண்ணம் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு உலகம் முழுக்க எதிர்பார்ப்பு உள்ளது. இந்தியாவிலும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு உள்ளது. அதனால் மும்பையில் சில தினங்களாக ஒடிசி படத்தை புரொமோஷன் செய்தார் கிறிஸ்டோபர் நோலன். உலகம் முழுக்க இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பன்மொழிகளில் வெளியாகி உள்ளது. சில மாநிலங்களில் காலை 6 மணிக்கே இப்படம் திரையிடப்பட்டது. தமிழகத்தில் 9 மணிக்கு மேல் காட்சிகள் துவங்கின.

இந்தப் படம் முழுவதும் ஐமேக்ஸ் (IMAX) கேமராக்களால் படமாக்கப்பட்டுள்ளது. ஐமேக்ஸ் திரையில் பார்க்கும் போது அதன் பிரமாண்டமே வேறு மாதிரி இருக்கும். அந்த உலகிற்குள்லேயே நேரடியாக பார்வையாளர்களை அழைத்து செல்லும் உணர்வை தரும். இந்த படத்தை பார்க்க விரும்புபவர்கள் முன்கூட்டியே குறைந்தது அரை மணிநேரம் முன்னதாக செல்லுங்கள். காரணம் படத்தின் துவக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை கவரக் கூடிய அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவாம். படத்தின் துவக்கத்திலேயே கதையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் காட்சிகள் உள்ளது என்கிறார்கள். போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட எதிலும் சிக்காதீர்கள். கடைசிநேரத்தில் உள்ளே வராதீர்கள். முக்கியமாக தியேட்டர்களில் விளக்குகள் அணைக்கப்படுவதற்கு முன்பே உங்கள் இருக்கையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அப்போது இந்த படத்தின் பிரமாண்டத்தை முழுமையாக ரசிக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !