உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நிதி மோசடியில் சிக்கி தேசிய விருதுகளைத் தவறவிட்ட 'மஞ்சும்மேல் பாய்ஸ்'

நிதி மோசடியில் சிக்கி தேசிய விருதுகளைத் தவறவிட்ட 'மஞ்சும்மேல் பாய்ஸ்'


கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' திரைப்படம் 230 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சிறிய பட்ஜெட்டில், பெரிய அளவில் அறிமுகம் இல்லாத நடிகர்களை வைத்து உருவான இந்தப்படம், விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது. அந்த வகையில், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 72வது தேசிய விருதுகளுக்கான போட்டியில் இடம் பெற்றிருந்தும், இந்தப் படத்திற்கு விருதுகள் கிடைக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

ஆனால், இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் படத்தின் நாயகனுமான 'கூலி' புகழ் நடிகர் சவ்பின் சாஹிர், இந்தப் படம் தயாரிப்பு தொடர்பாக பைனான்சியர் ஒருவரிடம் ஒன்பது கோடி ரூபாய் நிதி பெற்று அவருக்கு அசல் மற்றும் லாபத்தில் பங்கு தராமல் ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கு தற்போது இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் காரணமாகவே 'மஞ்சும்மேல் பாய்ஸ்' விருதுகளைப் பெறத் தவறியது என்றும் சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !