உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / உண்மையான நபர்களையே மக்கள் கொண்டாடுவார்கள் : ஓவியா

உண்மையான நபர்களையே மக்கள் கொண்டாடுவார்கள் : ஓவியா

'பிக்பாஸ் காமன் மேன்' நிகழ்ச்சி வருகிற 16-ம் தேதி ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் சாமானிய மக்கள் பலரும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். இதில் வெற்றி பெறும் போட்டியாளர், பிக் பாஸ் சீசன் 10-ல் கலந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிகழ்வின் நடுவர்களில் ஒருவராக ஓவியா பணியாற்றுகிறார். இது குறித்து அவர் கூறும் போது மக்களுடன் எனக்குக் கிடைத்த அந்த ஆழமான அன்பை இந்த சீசன் சாமானிய மக்களுக்குக் கொடுக்கப்போகிறது. தயக்கமில்லாத, இயல்பான, உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தும் நபர்களையே மக்கள் எப்போதும் கொண்டாடுவார்கள் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !