உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 35 வருட கனவு... ‛மகுடம்' ரிலீஸ் குறித்து விஷால் உருக்கம்

35 வருட கனவு... ‛மகுடம்' ரிலீஸ் குறித்து விஷால் உருக்கம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். நடிக்க வருவதற்கு முன்பு நடிகர் அர்ஜூன் இயக்கிய சில படங்களில் உதவி இயக்குனராக வேலை பார்த்த அனுபவம் உடையவர். ரவி அரசு இயக்க, விஷால் நடிக்க மகுடம் படம் ஆரம்பமானது. படப்பிடிப்பு ஆரம்பமான சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே பிரச்னை உருவாக படத்தை இயக்கும் பொறுப்பை விஷாலே ஏற்றுக் கொண்டார். அஞ்சலி, துஷாரா விஜயன் நடித்துள்ளனர். அவரது இயக்கத்தில் வெளியாக உள்ள முதல் படமாக ‛மகுடம்' இன்று வெளியாகி உள்ளது.

விஷால் வெளியிட்ட பதிவில், ‛‛நான் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டேன். நான் விஷால், கடவுளின் பிள்ளை. சவால்கள் அதிகமாக அதிகமாக, நான் இன்னும் உயர்ந்து நிற்பேன். ஏனெனில், தயக்கமோ வெட்கமோ இன்றி என்னால் கண்ணாடியைப் பார்த்து நிற்க முடியும். நான் எனது வேலையை மன உறுதியோடும், விடாமுயற்சியோடும், மனபலத்தோடும் செய்கிறேன்.

திரையுலகிலும், சமூகத்திலும் இன்று நான் என்னவாக இருக்கிறேனோ, அதற்கு காரணமான எனது அன்பிற்குரிய ரசிகர்களை கடவுளுக்கு நிகராகவே கருதுகிறேன். அவர்களுக்காக ஒரு நடிகனாக எனது கடமையை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறேன்.

​எனது 35 கால கனவு இன்று நனவாகியுள்ளது. 'மகுடம்' திரைப்படம் படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குனராக உங்கள் அனைவரின் முன் வந்து நிற்கிறேன். என் பணியை முடித்துவிட்டேன். உலகளாவிய திரையரங்க வெளியீட்டின் மூலம் உங்களிடம் கொண்டு வந்து சேர்க்க காத்திருக்கிறேன். காட்சிகள் தொடங்கின, கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !