சீனாவிலும் பிரம்மாண்டமாக வெளியாகும் ராமாயணா
ரன்பீர் கபூர், சாய்பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ராமாயணா படத்தை சர்வதேச அளவில் பிரமாண்டமாக வெளியிடுகிறார்கள். நிதேஷ் திவாரி இயக்கும் இந்த இதிகாச படத்தை வருகிற நவம்பர் 6ம் தேதி அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் சர்வதேச விநியோக உரிமையை ஹாலிவுட் நிறுவனமா சோனி பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தை சீனா உள்ளிட்ட முக்கிய வெளிநாட்டுகளில் ஒரே நேரத்தில் வெளியிடத் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர். அதோடு இதுவரை சீனாவில் வெளியான இந்திய படங்களை விட அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள். வெளிநாடுகளில் வெளியாகும் அதே தேதியில் இந்தியாவிலும் படத்தை வெளியிட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. இதன் மூலம் உலகம் முழுவதும் ஒரே நாளில் மிகப்பெரிய அளவில் இப்படம் வெளியாகும் என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.