ஸ்ரீதேவியின் சுயசரிதை புத்தகம் விரைவில் வெளியீடு
ADDED : 2 hours ago
இந்திய திரையுலகின் மிகவும் விரும்பப்பட்ட மற்றும் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் ஸ்ரீதேவி. கடந்த 2018-ம் ஆண்டு மறைந்தார். நடிகை பிரியங்கா சோப்ரா, ஸ்ரீதேவியின் சுயசரிதை புத்தகத்தின் அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளார். எம்ப்ரஸ் ஸ்ரீதேவி : தி டெபனிடிவ் பயோகிராபி ஆப் ஸ்ரீதேவி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தை தீரஜ் யூ. குமார் எழுதியுள்ளார். இது ஸ்ரீதேவியின் வாழ்க்கை, திரைப்பயணம் மற்றும் இந்திய சினிமாவில் அவர் கடந்து வந்த பாதையை விவரிக்க உள்ளது.
இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவரான ஸ்ரீதேவியின் வாழ்க்கையையும் சாதனைகளையும் மீண்டும் திரும்பிப் பார்க்க இந்த சுயசரிதை ரசிகர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. விரைவில் இந்த புத்தகம் வெளியாக உள்ளது.