ராணி முகர்ஜிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம்
ADDED : 21 hours ago
பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி 90-களில் இருந்து 2000-ன் துவக்க காலம் வரை பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். தற்போது அவருக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பிரபலமான லா ட்ரோப் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. 2019-ல் நடிகர் ஷாருக்கானுக்கு இப்படி டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட பிறகு, ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தப் பெருமையை பெறும் இரண்டாவது இந்திய நடிகர் என்கிற பெருமையை ராணி முகர்ஜி பெற்றுள்ளார்.
இந்திய திரையுலகில் சுமார் 30 ஆண்டுகள் அவரது பங்களிப்பு, சமூக சேவைகள் மற்றும் மனிதநேயப் பணிகளைப் பாராட்டும் விதமாக இந்த பட்டம் அவருக்கு மெல்போர்ன் நகரில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் நேரில் கலந்து கொண்டு இந்த விருதைப் பெற்றுக் கொண்டார் ராணி முகர்ஜி.