உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சென்னையில் தான் என் திரையுலக போராட்டம் துவங்கியது : ரவி தேஜா

சென்னையில் தான் என் திரையுலக போராட்டம் துவங்கியது : ரவி தேஜா

சிவா நிர்வானா இயக்கத்தில் ரவி தேஜா, பிரியா பவானி சங்கர், சிறுமி நட்சத்திரா நடிப்பில் தெலுங்கில் உருவாகி, தமிழில் வெளியாகி உள்ள படம் ‛இருமுடி எனும் இருமுடி கட்டு'. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அப்பா, மகள் பாசக் கதையில் அதனுடன் சமூகத்தில் பெண் பிள்ளைகளை பயத்துடன் அல்லாமல் தைரியத்துடன் வளக்கணும் எனும் செய்தியையும், மாணவிகளுக்கு நடக்கும் பாலியல் சீண்டல் போன்ற விஷயங்களை உள்ளடக்கியும் இந்தப்படம் வெளியாகி உள்ளது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தொடர் தோல்விகளை சந்தித்து வந்த ரவி தேஜாவிற்கு இப்படம் வெற்றியை தந்துள்ளது.

இந்த படத்திற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் பேசிய ரவி தேஜா, ‛‛எனக்கு தமிழ் மொழி மீது பெரிய ஈர்ப்பு உண்டு. தமிழ் மொழி மற்றும் அந்த நையாண்டி பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும். எனது திரையுலக போராட்டம் 90களில் மத்தியில் சென்னையில் தான் துவங்கியது. உண்மையில் இந்தப்படம் இதயத்தை தொடக்கூடியது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பார்த்து சின்ன பிள்ளைகள், ஆண்கள் அழுகிறார்கள்.

இந்த படத்தில் என் மகளாக நடித்த நட்சத்திராவுக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் உள்ளது. பிரியா உடன் பணியாற்றியது சிறந்த அனுபவம், எதார்த்தமான ஒரு நடிகை. இந்த படம் கண்டிப்பாக ஜெயிக்கும் என இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் சிவா நிர்வானாவிடம் சொன்னேன். அது நடந்துள்ளது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !