ஐதராபாத் பட விபத்து : சென்னையில் டாக்சிக் பட நிகழ்ச்சி ரத்து
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா நடித்துள்ள டாக்சிக் படம் ஆகஸ்ட் 26ம் தேதி ரிலீஸ் ஆகிறது. பெங்களூரை தொடர்ந்து ஐதராபாத்தில் நேற்று பட நிகழ்ச்சி நடந்தது. அப்போது யஷ் பேசிக்கொண்டிருந்த போது ஸ்பீக்கர் கட்டி இருந்த இரும்பு சாளரத்தில் சிலர் ஏறியதால் அது சரிந்து விபத்து ஏற்பட்டது இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டது. மற்றபடி பெரிய இழப்பு இல்லை ஆனாலும் அந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று மாலை டாக்சிக் பட குழுவினர் அனைவரும் கலந்து கொள்ளும் சிறப்பு விளம்பர நிகழ்ச்சி நடைபெற இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் திடீரென அது ரத்தாகி உள்ளது. இன்று மாலைக்கு பதில் நாளை மாலை நிகழ்ச்சி நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது. ஐதராபாத் நிகழ்ச்சியை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் அது தொடர்பான ஆலோசனை வேறு சில பிரச்னைகள் காரணமாக நிகழ்ச்சி ரத்தாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அடுத்து நிகழ்ச்சிகளில் கூட்டம் பாதுகாப்பு விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்த டாக்சிக் குழு முடிவு செய்துள்ளதாம்.