டாக்சிக் போட்டியையும் மீறி வசூலில் டாப்பில் இருக்கும் இருமுடி
ரவி தேஜா நடிப்பில், சிவா நிர்வானா இயக்கத்தில் வெளியாகியுள்ள இருமுடி படம் திரையரங்குகளில் தொடர்ந்து நல்ல வசூலை பெற்று வருகிறது. எந்தவொரு கட்டண உயர்வும் அல்லது தொடர் விடுமுறை சாதகமும் இன்றி, வெறும் 4 நாட்களிலேயே இப்படம் ரூ. 100 கோடி மொத்த வசூல் சாதனையை எட்டியுள்ளது.
6-வது நாளில் யஷ் நடித்த டாக்சிக் படம் வெளியாகி, தெலுங்கு மாநிலங்களில் அதிகப்படியான திரையரங்குகளைக் கைப்பற்றியதால் இருமுடி படத்திற்கு உண்மையான சவால் தொடங்கியது. இருப்பினும், திரையிடப்படும் காட்சிகள் மற்றும் திரையரங்குகள் குறைந்தபோதிலும், தனியார் செயலியில் சுமார் 2,43,000 டிக்கெட்டுகள் விற்பனையாகி இருமுடி திரையரங்குகளில் தனது வலுவான இடத்தை நிலைநிறுத்தியுள்ளது.
குறிப்பாக, டாக்சிக் படம் எதிர்பார்த்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தாததால் இருமுடி படத்தின் வசூல் வேகம் குறையாமல் உள்ளது. இனி வரவிருக்கும் வார இறுதிநாட்கள் இப்படத்திற்கு மிக முக்கியமானவை. காரணம் அடுத்து பெரிய போட்டிகள் எதுவும் இல்லை. இருமுடி இதே வேகத்தைத் தொடர்ந்தால், திரையரங்கு வசூலில் ரூ. 200 கோடி இலக்கை அடைவது சாத்தியமே.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் பேபி நட்சத்திரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.