கர்ப்ப காலத்தில் அதிக எடையுடன் உடற்பயிற்சி செய்யும் சமந்தா
நடிகை சமந்தா தனது முதல் குழந்தையை எதிர்பார்த்து இருக்கிறார். தனது கர்ப்ப காலப் பயணத்தை உணவுப் பழக்கம், உடற்பயிற்சி முறைகள் மற்றும் கணவர் ராஜ் நிடிமோருவுடனான பேபிமூன் சுற்றுலா வரை, இன்ஸ்டாகிராமில் திறந்த மனதுடன் பகிர்ந்து வருகிறார். தற்போது அவர் உடற்பயிற்சி கூடத்தில் அதிக எடையுள்ள உபகரணங்களை வைத்து பயிற்சி செய்யும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். கர்ப்ப காலத்தில் எடையுள்ள பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்று பலரும் நினைப்பதால், அவரது உடற்பயிற்சி புகைப்படங்கள் விரைவாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.
இதுபற்றி சமந்தா கூறுகையில், ‛‛பல ஆண்டுகளாக எடை காக்கும் பயிற்சிகளை செய்து வருவதாகவும், தனது மருத்துவரின் அனுமதியைப் பெற்ற பிறகே கர்ப்ப காலத்திலும் அதைத் தொடர்வதாகவும் விளக்கமளித்துள்ளார். மேலும், தனது பயிற்சியாளர் கர்ப்ப கால உடற்பயிற்சிகளில் சான்றிதழ் பெற்றவர் என்றும், தனது உடல்நிலை மற்றும் கர்ப்ப காலத்திற்கு ஏற்ப அனைத்து பயிற்சிகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரின் கர்ப்ப காலமும் மாறுபட்டது என்பதால், தனது உடற்பயிற்சி முறையை மற்ற பெண்கள் அப்படியே பின்பற்ற வேண்டாம் என்றும் சமந்தா வலியுறுத்தியுள்ளார்.