மீண்டும் 'துரந்தர்': 'டாக்சிக்' படத்தை நக்கலடித்தாரா ராம் கோபால் வர்மா?
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடித்து ரிலீசான படம் 'டாக்சிக்'. நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தில் ஏகப்பட்ட வயலன்ஸ் காட்சிகள் நிறைந்துள்ளதாக பலரும் முகம் சுளிக்கின்றனர். இதுவே படத்தின் மீதான ஈர்ப்பை 'புஸ்' ஆக்கியது.
சமீபத்தில் ஹிந்தியில் ரிலீசான 'துரந்தர்' படத்திலும் வயலன்ஸ் காட்சிகள் அதிகம் இருப்பதாக விமர்சிக்கப்பட்டாலும், அது பல கோடிகளை அள்ளியது. ஆனால், 'டாக்சிக்' படம் அதற்கு நேரெதிராக தோல்வியை நோக்கி செல்கிறது. இதனை விமர்சிக்கும் வகையில் இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது எக்ஸ் தளத்தில், 'நான் மீண்டும் துரந்தர் பார்த்துக்கொண்டிருக்கிறேன்' எனப் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் டாக்சிக் படத்தை தான் விமர்சித்திருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.