உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பிரேமலு 2' கைவிடப்பட்ட காரணம் இதுதான் ; வெளிப்படையாகச் சொன்ன இயக்குனர்

'பிரேமலு 2' கைவிடப்பட்ட காரணம் இதுதான் ; வெளிப்படையாகச் சொன்ன இயக்குனர்


கடந்த 2024ல் மலையாளத்தில் வெளியான 'பிரேமலு' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்தில் கதாநாயகியாக நடித்த மமிதா பைஜு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று முன்னணி நடிகைகளின் வரிசைக்கு உயர்ந்துள்ளார். கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், பின்னர் அது கைவிடப்பட்டு, தற்போது 'பெத்லகேம் குடும்ப யூனிட்' என்கிற படத்தை இயக்கி அதையும் வெற்றிப் படமாக கொடுத்துள்ளார் இயக்குநர் கிரிஷ் ஏ.டி. அதேசமயம் 'பிரேமலு 2' படம் கைவிடப்பட்டதற்கான காரணத்தையும் சமீபத்தில் மனம் திறந்துள்ளார் கிரிஷ் ஏ.டி.

இது குறித்து அவர் கூறும்போது, இரண்டாம் பாகத்திற்கான கதைக்களத்தை நானும் இணை எழுத்தாளருமான கிரண் ஜோஷியும் இணைந்து விவாதித்த போதிலும், கதை சரியான திசையில் செல்வதாக எனக்குத் தோன்றவில்லை. கதையின் மீது முழுமையான திருப்தி அடையவோ அல்லது என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்ளவோ முடியவில்லை. அந்த அளவிற்கு முதல் பாகத்தின் தரத்திற்கு இணையாகக் கதையைக் கொண்டுவருவதில் சிக்கல் இருந்தது. குறிப்பாக எனது உள்ளுணர்வு இது சரியில்லை என கூறியதால் இப்படத்தைக் கைவிடுவதாக முடிவு எடுத்தோம் என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !