உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்திற்காக 14 கிலோ எடையைக் கூட்டி குறைத்த நிமிஷா சஜயன்

இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்திற்காக 14 கிலோ எடையைக் கூட்டி குறைத்த நிமிஷா சஜயன்


'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்', 'சித்தா' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் மலையாள நடிகை நிமிஷா சஜயன். தற்போது முதன்முறையாக 'பபிதா சிங் ரிப்போர்ட்டிங்' என்கிற படம் மூலமாக பாலிவுட்டிலும் அடி எடுத்து வைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தில் இவர் பபிதா சிங் என்கிற சப்-இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தக் கதாபாத்திரத்திற்காக அவர் தனது உடல் எடையை 58 கிலோவிலிருந்து 14 கிலோ வரை அதிகரித்து கிட்டத்தட்ட 72 கிலோ வரை கூட்டியிருந்தார்.

ஆனால், படப்பிடிப்பு முடிந்த பிறகு மீண்டும் தன் உடல் எடையைத் பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்காகக் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது என்றும், அது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தனக்கு மிகவும் சவாலாக இருந்தது என்றும் நிமிஷா சஜயன் கூறியுள்ளார். இந்த கடினமான எடை குறைப்புப் பயணத்தில் உடற்பயிற்சியாளர் ஷிபாஸ் அலி தனக்கு மிகப்பெரிய தூணாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !