ராக்கா படம் அடுத்தாண்டு டிசம்பர் 31ல் ரிலீஸ்
அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் படம் ராக்கா. தீபிகா படுகோனே நாயகியாக நடிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. சாய் அபயங்கர் இசையமைக்கும் இதில், ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து மும்பையில் நடந்து வருகிறது.
இந்நிலையில் ராக்கா படத்தை 2027ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி திரையரங்குகளில் ஒரு பிரமாண்ட புத்தாண்டு படமாக வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. தயாரிப்பு நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வத் தேதியை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், 2027 டிசம்பர் வெளியீட்டை இலக்காக கொண்டே அனைத்து பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் அல்லு அர்ஜுன் மூன்று வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.