உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இருமுடி படத்திற்குப் பிறகு தனுஷை இயக்கும் சிவா நிர்வானா

இருமுடி படத்திற்குப் பிறகு தனுஷை இயக்கும் சிவா நிர்வானா

சிவா நிர்வானா இயக்கத்தில் ரவிதேஜா, பிரியா பவானி சங்கர், சிறுமி நட்சத்திரா ஆகியோர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி திரைக்கு வந்த படம் இருமுடி. இப்படம் பாக்ஸ் ஆபீசில் 200 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில் தனது அடுத்த படத்தை தனுஷை வைத்து சிவா நிர்வானா இயக்கப் போவதாக டோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கில், தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கிய சார் (வாத்தி) , சேகர் கம்முலா இயக்கிய குபேரா போன்ற படங்கள் தனுசுக்கு வெற்றியைத் தந்தன. இந்நிலையில், ஏற்கனவே தனுஷிடத்தில் கதை சொல்லி இருந்த சிவா நிர்வானா தற்போது மீண்டும் தனுஷை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாகவும், தமிழ், தெலுங்கில் உருவாகும் அப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !