உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டிராகன் படத்தில் கெஸ்ட் ரோலில் ஷாகித் கபூர், ஆலியா பட்

டிராகன் படத்தில் கெஸ்ட் ரோலில் ஷாகித் கபூர், ஆலியா பட்

ஜூனியர் என்டிஆர் நடிப்பில் அடுத்து திரைக்கு வரவுள்ள படம் டிராகன். ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் அனில் கபூர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிரசாந்த் நீல் இயக்கும் இந்த டிராகன் படப்பிடிப்பின்போது ஜூனியர் என்டிஆருக்கு தோள்பட்டை காயம் ஏற்பட்டு நடந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு ஓய்வில் உள்ளார். விரைவில் இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல்படி, பாலிவுட் நட்சத்திரங்களான ஷாகித் கபூர் மற்றும் ஆலியா பட் ஆகியோர் டிராகன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து நடித்திருந்தார் ஆலியா பட். அதையடுத்து தற்போது மீண்டும் டிராகனில் அவர்கள் இணையவுள்ளார்கள். இப்படம் 2027ம் ஆனது ஜூன் 11-ல் திரைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !