'இஞ்சி வெல்லம்' : மணிரத்னம் பட தலைப்பு
ADDED : 10 hours ago
‛தக் லைப்' படத்திற்கு பிறகு இயக்குனர் மணிரத்னம் காதல் கதை களத்திற்கு திரும்பியுள்ளார். தற்போது அவர் இயக்கி வரும் புதிய படத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். முதற்கட்ட படப்பிடிப்பு மேற்கு வங்கத்தில் துவங்கியது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதுநாள்வரை படத்திற்கு பெயர் வைக்காமல் படப்பிடிப்பை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த படத்திற்கு 'இஞ்சி வெல்லம்' என பெயரிட்டு, படத்தின் முதல் பார்வை போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். மழையில் நனைந்தபடி விஜய் சேதுபதி, சாய் பல்லவி ரொமான்ஸ் செய்யும் போட்டோ அதில் இடம் பெற்றுள்ளது.