உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛முருகா' அசோக் உடன் ஒரே படத்தில் அறிமுகமாகும் 3 ஹீரோயின்கள்

‛முருகா' அசோக் உடன் ஒரே படத்தில் அறிமுகமாகும் 3 ஹீரோயின்கள்

ரியா ஸ்ரீ கிரியேஷன்ஸ் சார்பில் திருமாறன் தயாரித்து நெடுமாறன் மோகன்தாஸ் இயக்கி உள்ள படம் 'கிட்டி'. முருகா அசோக் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிஷா, சங்கவை, நிமு அத்வானி என 3 நாயகிகள் நடிக்கிறார்கள். இயக்குனர் ஆர். அரவிந்த்ராஜ், ஒய் ஜி மகேந்திரன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். வி.எஸ்.வேலன் ஒளிப்பதிவு செய்கிறார், காதர் இசை அமைக்கிறார்.

படம் பற்றி இயக்குநர் கூறும்போது “நாட்டில் நம்மை சுற்றி எவ்வளவு குற்றங்கள் நடந்தாலும் யார் செய்தார்கள் என்ற விசாரணை செய்வதுதான் ரெகுலர் பார்முலா திரைக்கதையாக தமிழ் சினிமாவில் உள்ளது. அதை மாற்றி கதை நாயகனை சுற்றி பின்னப்பட்டிருக்கும் இந்த திரைக்கதை நிச்சயம் புதிதாக இருக்கும்.

நாயகன் அசோக் மனநோயாளியாக நடிக்கிறார். அவருக்கு இப்படம் நிச்சயமாக திருப்புமுனையாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை . முருகா அசோக்கிற்கு இப்படத்தில் மூன்று நாயகிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம், கடலூர், தரங்கம்பாடி, சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று நிறைவடைந்து இருக்கிறது” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !