உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டிஸ்கோ சாந்திக்கு என்னாச்சு?

டிஸ்கோ சாந்திக்கு என்னாச்சு?


ஐதராபாத்தில் வசிக்கும் நடிகை டிஸ்கோ சாந்தி ஆஸ்பிட்டலில் சிகிச்சை எடுப்பது மாதிரியான போட்டோவை வெளியிட்டு இருந்தார். அவருக்கு என்னாச்சு? என்ன நடந்தது என அவரை தொடர்பு கொண்டு கேட்டோம். டிஸ்கோ சாந்தி கூறியதாவது: சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்தேன். என் அம்மாவின் நெருங்கிய தோழி காலமானார். அவர் சின்ன வயதில் என்னை தூக்கி வளர்த்தவர். அதனால் அவர் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஐதராபாத் திரும்பினேன்.

அடுத்த சில மணி நேரத்தில் கடும் உடல் வலி, நல்ல காய்ச்சல். வீட்டில் சமாளிக்க முடியவில்லை. பக்கத்தில் ஆஸ்பிட்டலில் சேர்த்தான் மகன். அங்கே நிலை இன்னும் மோசமானது. ஐ.சி.யூ, டீரிட்மெண்ட் என கஷ்டப்பட்டேன். சென்னையில் பல இடங்களில் வைரஸ் காய்ச்சல் என கேள்விப்பட்டேன். எனக்கும் எப்படியோ தொற்றிக்கொண்டது. என் மகனுக்கு இன்று பிறந்த நாள் என்பதால், இரு மகன்கள் லண்டன் செல்ல இருப்பதால். வீட்டுக்கு செல்ல நினைத்தேன்.

அதனால் டாக்டரிடம் கெஞ்சி கூத்தாடி வீடு வந்து சேர்ந்தேன். வீட்டிலேயே ஆஸ்பிட்டல் செட் அப். இங்கே நர்ஸ் இருக்கிறார். இப்போது உடல் நிலை பரவாயில்லை. சின்ன வைரஸ் காய்ச்சல் என நினைத்தேன். ஆனால் அது ரொம்பவே படுத்திவிட்டது. அனைவரும் ஜாக்கிரதை ஆக இருக்கணும். உடல் வலி, காய்ச்சல் என வந்தால் தகுந்த ட்ரீட்மெண்ட் எடுக்க வேண்டும். என் போட்டோ பார்த்துவிட்டு சோஷியல் மீடியாவில் ஆதரவு தெரிவித்த, நல்ல வார்த்தை சொன்னவர்களுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !