sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஷிரூர் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

/

ஷிரூர் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

ஷிரூர் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

ஷிரூர் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு


ADDED : ஜூலை 22, 2024 06:32 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கார்வார்: ''ஷிரூர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு, தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்,'' என்று, முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கடந்த 17ம் தேதி உத்தர கன்னடாவின் ஷிரூர் பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதுவரை ஏழு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் சிலரது உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் முதல்வர் சித்தராமையா நேற்று மதியம் ஷிரூர் சென்று நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

வருவாய் அமைச்சர் கிருஷ்ண பைரகவுடா, உத்தர கன்னடா மாவட்ட பொறுப்பு அமைச்சர் மங்கள் வைத்யா, கலெக்டர் லட்சுமி பிரியா ஆகியோரிடம் இருந்து தகவல்களை கேட்டு அறிந்தார். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

* மீட்பு குழுவுக்கு பாராட்டு

பின் சித்தராமையா அளித்த பேட்டி:

ஷிரூரில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள இடத்தின் வலதுபுறம் உள்ள, காளி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு நடுவிலும், நிலச்சரிவில் சிக்கியவர்கள் உடல்களை தேசிய பேரிடர், மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர். அவர்களின் முயற்சியை பாராட்டுகிறேன்.

நிலச்சரிவில் சிக்கியவர்களை கண்டறிய ரேடார் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 46 பேர், மாநில பேரிடர் மீட்பு குழுவினர் 24 பேர், ராணுவம் மற்றும் கடற்படையை சேர்ந்த 44 பேர் ஈடுபட்டு உள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதம் மூன்று பேரின் உடல்களை தேடும்படி தொடர்ந்து நடந்து வருகிறது.

* தடுக்க நடவடிக்கை

உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருவதால், என்னால் இங்கு உடனடியாக வர முடியவில்லை.

ஆனாலும் அமைச்சர்கள் கிருஷ்ணபைரே கவுடா, மங்கள் வைத்யா ஆகியோரை இங்கு அனுப்பி வைத்தேன். இங்கு ஏற்பட்டிருக்கும் நிலச்சரிவுக்கு அறிவியலற்ற வேலைகள் தான் காரணம். யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

நிலச்சரிவில் சிக்கிய கேரள லாரி டிரைவர் அர்ஜுனன் உடலை மீட்பதில் எந்த தாமதமும் ஏற்படவில்லை. இப்பகுதியில் பல ஆண்டுகளாக நிலச்சரிவு ஏற்படவில்லை. இந்த ஆண்டு கனமழையால் நிலச்சரிவில் ஏற்பட்டுள்ளது. எந்தப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டாலும், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* அர்த்தம் இல்லை

இயற்கை சீற்றங்களின் போது அரசியல் பேசுவதில் அர்த்தம் இல்லை. இங்கு அனைவரும் சிறப்பாக வேலை செய்து வருகின்றனர். நான் யாரையும் குறை சொல்ல போவதில்லை. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நாம் கொடுக்கும் நிவாரண தொகையால், இறந்தவர்கள் உயிர் திரும்பாது. இயற்கை சீற்றத்தை நம்மால் எதுவும் செய்யவும் முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று காலை ஷிரூருக்கு, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா சென்று, நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் ஆய்வு செய்தார். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

---------------

* கெத்தேகல் மலையில் நிலச்சரிவு அபாயம்

நேற்றும் சில மாவட்டங்களில் கனமழை பெய்தது. கடலோர மாவட்டமான தட்சிண கன்னடாவின் மங்களூரு- சோலாப்பூர் சாலையில் உள்ள கெத்தேகல் மலையிலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

குடகு, மைசூரு மாவட்டங்களில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. ஆற்றங்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி, கே.ஆர்.எஸ்., அணையின் நிர்வாக செயற்பொறியாளர் கேட்டு கொண்டுள்ளார்.

-------------------

* கிருஷ்ணாவில் வெள்ளம்

அண்டை மாநிலமான மஹாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள கொய்னா உள்ளிட்ட அணைகளில் இருந்து, தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் கிருஷ்ணா, வேதகங்கா, துாத் கங்கா ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பெலகாவி சிக்கோடி கரடக கிராமத்தில் உள்ள பங்காளி பாவா கோவிலை, வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கல்லோலா கிராமத்தில் கிருஷ்ணா ஆற்றின் கரையோரம் உள்ள தத்தாத்ரேயா கோவிலையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. நிப்பானியில் நேற்று பெய்த கன மழைக்கு வீடு இடிந்து விழுந்ததில், திருப்பதி ராமராஜ், 50 என்பவர் உயிரிழந்தார்.

-----------------

* அலமாட்டி அணை

விஜயபுராவில் பெய்யும் கனமழை, கொய்னா அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீரால் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அலமாட்டி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 123.08 டி.எம்.சி., கொள்ளளவு அணையில், 98.56 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 65,480 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1.50 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் ராய்ச்சூர், விஜயபுரா மாவட்டங்களில், கிருஷ்ணா ஆற்றங்கரையை ஒட்டி உள்ள கிராமங்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி தாசில்தார்கள், ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.

***






      Dinamalar
      Follow us