தே.ஜ., கூட்டணியின் முதல் 15 நாட்கள் ஆட்சி எப்படி?: பட்டியலிட்டு விமர்சித்த ராகுல்
தே.ஜ., கூட்டணியின் முதல் 15 நாட்கள் ஆட்சி எப்படி?: பட்டியலிட்டு விமர்சித்த ராகுல்
ADDED : ஜூன் 24, 2024 02:51 PM

புதுடில்லி: தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் 15 நாட்கள் ஆட்சி குறித்து பட்டியலிட்டு ராகுல் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக 'எக்ஸ்' வலைதளத்தில் ராகுல் பதிவிட்டதாவது:
தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் 15 நாட்களில்
1. பயங்கர ரயில் விபத்து
2. காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள்
3. ரயில்களில் பயணிகள் எதிர்கொள்ளும் அவல நிலை
4. நீட் முறைகேடு
5. நீட் முதுகலை தேர்வு ரத்து
6. யுஜிசி நெட் வினாத்தாள் கசிவு
7. பால், பருப்பு வகைகள், எரிவாயு, கட்டணங்கள் விலை உயர்வு
8. காட்டுத் தீ
9. தண்ணீர் பிரச்னை
10. வெப்ப அலையை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்காததால் ஏற்படும் உயிரிழப்புகள்
நரேந்திர மோடி தனது அரசை காப்பாற்றுவதில் மும்முரமாக இருக்கிறார். மோடி மற்றும் அவரது அரசு, அரசியல் சாசனத்தின் மீது நடத்தும் தாக்குதலை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த சூழ்நிலையிலும் இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்தியாவின் பலமான எதிர்க்கட்சியாக அரசுக்கு தனது அழுத்தத்தைத் கொடுக்கும், மக்களின் குரலை உயர்த்தும்; பிரச்னைகளுக்கு பொறுப்பேற்காமல் பிரதமரை தப்பிக்க அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.