ADDED : ஜூன் 30, 2025 01:26 AM

காங்கிரஸ், பா.ஜ., ஆகியவை தங்கள் ஆட்சியின் தவறான கொள்கைகளை மறைக்க, மக்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. மக்களின் நலனை காக்க, அரசியல்அமைப்பு சட்டத்தை அம்பேத்கர் நமக்கு வழங்கினார். இரு கட்சியினரும், தங்கள் கட்சி சித்தாந்தங்கள், அரசியல் நலன் சார்ந்து இச்சட்டத்தை அவ்வப்போது மாற்றுவதை கண்டிக்கிறோம்.
மாயாவதி, தலைவர், பகுஜன் சமாஜ்
காங்., மன்னிப்பு கேட்குமா?
நம் நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்தியது; 1984ல் சீக்கியர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவியது உள்ளிட்டவற்றுக்கு, இதுவரை காங்கிரஸ் மன்னிப்பு கோரவில்லை. இதற்கு, மக்களிடம் அக்கட்சி மன்னிப்பு கேட்குமா? இவற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி பெற்று தர முயற்சிப்பவர், நம் பிரதமர் மோடி மட்டுமே.
நயாப் சிங் சைனி, ஹரியானா முதல்வர், பா.ஜ.,
இது சமூக பிரச்னை!
மொழிசார்ந்த கல்வி என்பது சமூகத்தின் முக்கிய பிரச்னை. இதில், மற்றவர்களை திருப்திப்படுத்த குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிப்புக்கு உள்ளாக்கக் கூடாது. பள்ளிக்கல்வியில் மொழியை திணிக்கும் செயலில், மஹாராஷ்டிர அரசு தன்னிச்சையாக செயல்பட்டுள்ளது. வல்லுநர்களின் வழிகாட்டுதலின்படி, மாநில அரசு செயல்பட வேண்டும்.
சுப்ரியா சுலே, லோக்சபா எம்.பி., தேசியவாத காங்., சரத் பவார் அணி