ADDED : மே 24, 2025 08:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நொய்டா:நொய்டாவில் 55 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்.
உ.பி.,யின், கவுதம் புத்தா நகர் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி நரேந்திர குமார் கூறியதாவது:
நொய்டாவில் வசிக்கும் 55 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், வீட்டிலேயே தனி அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. அந்தப் பெண் கடைசியாக கடந்த 14ம் தேதி ரயிலில் பயணம் செய்துள்ளார்.
எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்க மருத்துவத் துறை தயாராக உள்ளது. மக்கள் பீதி அடைய வேண்டாம். பொதுவெளியில் செல்லும் போது, முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். கொரோனா தொற்று பரவல் கால நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.