ADDED : ஜூன் 28, 2024 06:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முதலியார்பேட்டை அன்னை சிவகாமி மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி முதல்வர் எழில் கல்பனா தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் போதை பொருள் விழிப்புணர்வு குறித்து, விளக்கினர்.