/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போரூர் ஏரியில் படர்ந்துள்ள ஆகாய தாமரை அகற்றம்
/
போரூர் ஏரியில் படர்ந்துள்ள ஆகாய தாமரை அகற்றம்
ADDED : ஜூலை 15, 2024 02:08 AM

போரூர்,:நம் நாளிதழ் எதிரொலியாக, போரூர் ஏரியில் படர்ந்துள்ள ஆகாய தாமரையை அகற்றும் பணி நடந்து வருகிறது.
சென்னைக்கு மிக அருகில், மாநகராட்சி எல்லையில் போரூர் ஏரி உள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு, போரூர் ஏரி துார் வாரப்பட்டு, 46 மில்லியன் கன அடி கொள்ளளவில் இருந்து, 70 மில்லியன் கன அடி நீரை சேமிக்கும் வகையில் ஆழப்படுத்தப்பட்டது.
கடந்த ஆண்டு,'மிக்ஜாம்' புயல் தாக்கத்தால் பெய்த கன மழையில், போரூர் ஏரி நிரம்பி வழிந்தது. தற்போது, ஏரி முழுதும் ஆகாய தாமரை படர்ந்துள்ளது.
இந்த செடிகளால், ஏரியில் உள்ள தண்ணீர் விரைவில் உறிஞ்சப்படும்.
அத்துடன், நீர் பரப்பிற்கு ஆக்சிஜன், சூரிய ஒளி செல்வது தடைபட்டு, நீர்வாழ் உயிரினங்கள், நன்மை தரும் செடிகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, ஏரியில் படர்ந்துள்ள ஆகாய தாமரையை அகற்ற வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, மிதவையில் 'பொக்லைன்' வாகனத்தை வைத்து, ஏரியில் தேங்கியுள்ள ஆகாய தாமரையை அகற்றும் பணியில், நீர்வளத்துறை ஈடுபட்டுள்ளது.