ADDED : ஜூலை 11, 2024 10:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து, புது பஸ்ஸ்டாண்ட் அருகே காங்., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை தெற்கு மாவட்ட ஐ.என்.டி.யு.சி., தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கிணத்துக்கடவு சட்டசபை பொறுப்பாளர் சேதுபதி, நகர தலைவர் சார்லஸ் செந்தில், மாவட்ட தலைவர் பவகவதி, மாநில துணை தலைவர் மோகன்ராஜ், நிர்வாகிகள் கலாவதி, வள்ளிநாயகி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.