/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போலீஸ் பாதுகாப்புடன் வாலிபர் உடல் அடக்கம்
/
போலீஸ் பாதுகாப்புடன் வாலிபர் உடல் அடக்கம்
ADDED : ஜூன் 16, 2024 06:09 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த மாத்துார் காலனியை சேர்ந்தவர்கள் பக்கிரிசாமி மகன் பாக்யராஜ், 40. பெயிண்டர். தி.மு.க., ஊராட்சித் தலைவர் சுப்ரமணியன் மகன் கலைவாணன் (எ) ராம்கி, 38. இருவரும் கடந்த 11ம் தேதி மது அருந்தியபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கலைவாணன் தாக்கியதில், படுகாயமடைந்த பாக்யராஜ், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பாக்யராஜ் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது தொடர்பாக கலைவாணன், ஊராட்சி தலைவர் சுப்ரமணியனை மங்கலம்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் பாக்யராஜ் உடல் பிரேத பரிசோதனை முடிந்து, நேற்று முன்தினம் இரவு 9:45 மணியளவில், மாத்துாரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட நேற்று காலை 11:00 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது. அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.