/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விழா மேடையை திருக்குறள் மேடையாக்கும் நல்லாசிரியர்
/
விழா மேடையை திருக்குறள் மேடையாக்கும் நல்லாசிரியர்
ADDED : ஜன 27, 2024 06:15 AM

வடலுார் : குறிஞ்சிப்பாடி பகுதியில் திருவிழா, பட்டிமன்ற மேடைகளில் இலவசமாக திருக்குறள் புத்தகம் கொடுத்து திருக்குறள் மேடையாக மாற்றும் நல்லாசிரியர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
குறிஞ்சிப்பாடி எஸ்.கே.வி. மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் டாக்டர் நவஜோதி. இவர் தமிழக அரசின் நல்லாசிரியர் விருதை பெற்றுள்ளார். குறிஞ்சிப்பாடி பகுதியில் நடக்கும் கோவில் திருவிழாக்களில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டிமன்ற பேச்சாளராக செயல்பட்டு தற்போது பட்டிமன்ற நடுவராக செயல்பட்டு வருகிறார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் முன்னிலையில் பட்டி மன்றங்களில் பங்கேற்றுள்ளார். பட்டிமன்றம் முடிந்தவுடன் மாணவ, மாணவிகள், கிராம மக்கள் என 25 பேருக்கு இலவசமாக திருக்குறள் புத்தகம் கொடுத்து வருகிறார்.
இது குறித்து நவஜோதி கூறுகையில், 'திருக்குறள் புத்தகத்தில் ஒரு மனிதன் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் உள்ளது. திருக்குறள் படித்தாலே ஒரு மனிதன் ஒழுக்கம் உள்ளவனாகவும், நல்லவனாகவும் சமுதாயத்தில் வாழ முடியும். ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய நுால் திருக்குறள். அதனால் நான் ஒவ்வொரு பட்டிமன்ற மேடையிலும் திருக்குறள் புத்தகம் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன்' என்றார்.

