ADDED : ஜூலை 23, 2024 02:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : நில சீர்த்திருத்த சட்டத்தில் வழங்கப்பட்ட நிலத்தை, ஆக்கிர-மிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், தமிழ் புலிகள் கட்சி நிர்வாகி பொன்னுசாமி தலைமையில் மனு வழங்கினர். மனுவில் கூறியதாவது:
கோபி அடுத்த பெருமுறை கிராமத்தை சேர்ந்த பண்ணாரி என்ப-வரின் கணவர் காசானுக்கு, 1991ல் நில சீர்திருத்த சட்டத்தில், அரசு நிலம் வழங்கப்பட்டது. காசான் இறந்ததால், அவரது மனைவி விவசாயம் செய்து வருகிறார். அப்பகுதியை சேர்ந்த சிலர் நிலத்தை ஆக்கிரமித்து, பண்ணாரியை நிலத்துக்குள் வரக்கூ-டாது என பிரச்னை செய்கின்றனர்.
இதுபற்றி வருவாய் துறை, போலீஸில் மனு வழங்கியும் நடவ-டிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, ஆக்கிரமிப்பா-ளர்களை வெளியேற்ற வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.