ADDED : ஜூலை 16, 2024 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு வட்டத்தில், 'உங்களை தேடி; உங்கள் ஊரில்' திட்ட கள ஆய்வு, 1௮ல் நடக்கிறது.
ஒவ்வொரு மாதமும் அம்மாவட்ட கலெக்டர், இத்திட்டத்தில் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வு செய்து, மக்களின் சேவை தடையின்றி சென்றடைவதை உறுதி செய்கின்றனர். இதன்படி நாளை மொஹரம் பண்டிகைக்காக அரசு விடுமுறை என்பதால், 18ல் 'உங்களை தேடி; உங்கள் ஊரில்' முகாம் நடக்கி-றது. ஈரோடு கலெக்டர், உயர் அதிகாரிகள், 18ம் தேதி காலை, 9:00 மணி முதல், 19ம் தேதி காலை, 9:00 மணி வரை பல்வேறு அரசு துறை திட்டங்களை ஆய்வு செய்கின்றனர். 18ம் தேதி மாலை, 4:30 மணி முதல், 6:00 மணி வரை ஈரோடு தாலுகா அலுவல-கத்தில் மக்களை சந்தித்து, குறை கேட்டு மனுக்கள் பெறுகிறார்.