/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மது குடிக்க பணம் தர மறுத்த மனைவி: விரக்தியில் முதியவர் தற்கொலை
/
மது குடிக்க பணம் தர மறுத்த மனைவி: விரக்தியில் முதியவர் தற்கொலை
மது குடிக்க பணம் தர மறுத்த மனைவி: விரக்தியில் முதியவர் தற்கொலை
மது குடிக்க பணம் தர மறுத்த மனைவி: விரக்தியில் முதியவர் தற்கொலை
ADDED : அக் 20, 2025 09:28 PM
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மதுபானம் குடிக்க மனைவி பணம் தராத விரத்தியில், விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
சங்கராபுரம் அடுத்த நெடுமானுார் சேர்ந்தவர் ராஜேந்திரன், 60; மதுகுடிக்கும் பழக்கம் உள்ளவர். இவர் நேற்று முன்தினம் இரவு மனைவி இந்திராகாந்தியிடம் மதுபானம் குடிப்பதிற்கு பணம் கேட்டார். அதற்கு பணம் தர மறுத்ததால், விரக்கதியில் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி கொல்லி மருந்தினை குடித்து மயங்கி விழுந்தார். உடன் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.