/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கோவில் திருவிழாவில் டிராக்டர் டிரெய்லர் கவிழ்ந்த விபத்தில் 8 வயது சிறுவன் பலி
/
கோவில் திருவிழாவில் டிராக்டர் டிரெய்லர் கவிழ்ந்த விபத்தில் 8 வயது சிறுவன் பலி
கோவில் திருவிழாவில் டிராக்டர் டிரெய்லர் கவிழ்ந்த விபத்தில் 8 வயது சிறுவன் பலி
கோவில் திருவிழாவில் டிராக்டர் டிரெய்லர் கவிழ்ந்த விபத்தில் 8 வயது சிறுவன் பலி
ADDED : ஜூலை 22, 2024 08:41 AM
குளித்தலை : கோவில் திருவிழாவுக்கு, டிராக்டர் டிரெய்லரில் தீர்த்தக்குடம் எடுத்து சென்றபோது, விபத்தில் சிக்கி, எட்டு வயது சிறுவன் பலியானார்.
கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த நங்கவரம் டவுன் பஞ்., புதுப்பாளையத்தில் கரைக்காளி-யம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதற்காக, நேற்று காலை, 11:00 மணிக்கு, நச்-சலுார் கிராம மக்கள், 25க்கும் மேற்பட்டோர், பெட்டவாய்த்தலை கரும்பாயி அம்மன் கோவில் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்துக்-கொண்டு, டிப்பர் டிராக்டரில் நச்சலுார் நோக்கி சென்றனர். கீழசுக்காம்பட்டி -- நச்சலுார் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த டூவீலர் முந்திச்-சென்று எதிரே வந்த டூவீலர் மீது மோதி விபத்-துக்குள்ளானது.
அப்போது, டிராக்டர் டிரைவர் திடீரென பிரேக் போட்டதால், கட்டுப்பாட்டை இழந்து சாலை-யோர பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்-குள்ளானது. டிராக்டர் முன்பக்கத்தில் அமர்ந்தி-ருந்த நச்சலுார் கிராமத்தை சேர்ந்த ராஜா மகன் ஸ்ரீதர்ஷன், 8, சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பலியானார். டிராக்டரில் அமர்ந்து வந்த அஸ்வின், 12, தர்ஷன், 7, சிசில்கான், 24, ஆகியோர் பலத்த காயமடைந்தனர். குளித்தலை அரசு மருத்துவமனையில் மூவருக்கும் முதலு-தவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.