ADDED : ஜூலை 22, 2024 08:41 AM
க.பரமத்தி : ''தொகுப்பு வீடுகளை சீரமைக்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது,'' என, மாவட்ட திட்ட இயக்-குனர் ஸ்ரீலேகாதமிழ்செல்வன் தெரிவித்தார்.
க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், மாவட்ட ஊரக வளர்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகாதமிழ்செல்வன் தலைமை வகித்து பேசியதாவது: 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தில் குடிசை வீடுகளில் வசிக்க கூடிய தகுதியான பயனாளிகள் கணக்கெ-டுப்பின்போது விடுபட்ட நபர்களின் விபரங்களை உடனே சேகரித்து வழங்கிடவும், கடந்த, 20 ஆண்-டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளை சீரமைக்க நிர்வாக அனுமதியும் வழங்கப்பட்டுள்-ளது. குக்கிராமங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவ-லர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஹேமாவதி உள்பட பலர் பங்கேற்றனர்.