/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தண்ணீரில் மூழ்கிய தற்காலிக பாலம்; ஆற்றை கடப்பதில் மக்களுக்கு சிக்கல்

ADDED : ஜூன் 27, 2024 09:24 PM

பந்தலுார் : பந்தலுார் அருகே பாலாவயல் பகுதியில் ஆற்றை கடக்க அமைக்கப்பட்ட தற்காலிக பாலத்தை வெள்ளம் சூழ்ந்து செல்வதால் ஆற்றை கடக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
பந்தலுார் அருகே கொளப்பள்ளியில் இருந்து பாலாவயல் வழியாக பாட்டவயல் மற்றும் பிதர்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது.
இந்த சாலை வழியாக, 20-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த மக்கள் நாள்தோறும் சென்று வருகின்றனர். சாலையின் நடுவே பாயும் ஆற்றை கடப்பதற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பாலம், 2019 பருவ மழையின் போது இடிந்தது. இதனால், தற்போது புதிய பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. மக்கள் ஆற்றை கடந்து செல்வதற்கு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது மழை பெய்து வருவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பாலத்தின் ஒரு பகுதியை ஆற்று வெள்ளம் சூழ்ந்ததுடன், மறுபகுதி தண்ணீரின் மேல் பகுதியில் அமைந்துள்ளதால் மக்கள் பாலத்தை கடக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், இந்த பகுதி மக்கள், 5 கி.மீ., துாரம் சுற்றி வேறு வழியில் பயணித்து வருகின்றனர்.